ஓரிறைக் கோட்பாடு
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7422 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே, 'என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது' என்று எழுதினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.60
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7423அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்) செய்தியை அறிவிக்கலாமா?' என்று (நபித் தோழர்கள்) கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தன்னுடைய பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும். அதற்கு மேலே அளவிலா அருளாள(ன் இறைவ)னின் அரியாசனம் (அர்ஷ்) இருக்கிறது. இன்னும் அ(ந்த படித்தரத்)திலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன என்று கூறினார்கள்.61
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7424அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ தர்ரே! இது (-சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று சொன்னேன். அவர்கள், 'இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்குக் கீழே) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காகச் செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம், 'நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்' என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்று இருக்கும். உடனே அது மறைந்த இடத்திலிருந்து (இறுதி நாளில்) உதயமாகும்' என்று சொல்லிவிட்டு, 'அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும்' (தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38 வது வசனத்தை) ஓதினார்கள்.62
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7425ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் வசனங்களை ஒன்று திரட்டும்படி கேட்டு) என்னிடம் ஆளனுப்பினார்கள். எனவே, நான் குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அப்போது 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் இறுதிப் பகுதியை அன்சாரியான கிடைக்கப்பெற்றேன். அவரல்லாத வேறொருவரிடமும் அதை நான் காணவில்லை. அந்த இறுதிப் பகுதி, 'உங்களிலிருந்தே ஓர் இறைத்தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்' என்பதிலிருந்து அல்பராஅத் வந்திருக்கிறார்' என்பதிலிருந்து அல்பராஅத் அத்தியாயத்தின் இறுதி(யான 'அவனே மகத்தான அரியாசனத்தின் அதிபதி ஆவான்' என்பது) வரை உள்ளதாகும்.
இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.63
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7426இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அலீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அரீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி, வ ரப்புல் அர்ளி, வ ரப்புல் அர்ஷில் கரீம்' (நன்கறிந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; மகத்தான அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், சிறப்புக்குரிய அரியாசனத்தின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை) என்று பிரார்த்தித்து வந்தார்கள்.64
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7427 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளில் மக்கள் மயக்கமடைந்து விடுவார்கள். அப்போது (நான் முதலாவதாக மூர்ச்சை தெளிந்து எழும்போது) மூஸாவின் அருகில் இருப்பேன். அவர்(இறை) அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.65
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7428 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அப்போது நானே முதலாவதாக (மயக்கம் தெளிவித்து) எழுப்பப்பட்டவனாக இருப்பேன். அப்போது மூஸா(இறை) அரியாசனத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.66
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7429 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரவில் சில வானவர்களும், பலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேருகிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கிறார்கள். அவர்களிடம் அல்லாஹ் 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டுவிட்டு வந்தீர்கள்?' என்று -உங்களைப் பற்றி அவன் நன்கறிந்த நிலையிலேயே - கேட்கிறான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களைவிட்டுவிட்டு வந்தோம்; அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்' என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.69
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7430 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் - பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.70
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7431இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது இச்சொற்களைக் கூறிப் பிரார்த்தித்துவந்தார்கள்: லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ஷில் கரீம். (மகத்துவமிக்கோனும் பொறுமை மிகுந்தோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; மகத்தான அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; வானங்களின் அதிபதியும் சிறப்புமிக்க அரியாசனத்தின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை.)71
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7432அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரஉ இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷிஈ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல்ஃபஸாரீ(ரலி), அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரீ அல்கிலாபீ(ரலி), ஸைத் அல்கைல் அத்தாயீ அந்நப்ஹானீ(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டார்கள். இதைக் கண்ட குறைஷியரும் அன்சாரிகளும் கோபமடைந்து, நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்கிறார்கள்; நம்மைவிட்டுவிடுகிறார்களே' என்று கூறினார்கள்.
(இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், '(புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) அவர்களை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு கொடுத்தேன்' என்றார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் முன்வந்து, 'முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்' என்று சொன்னான். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் வேறு யார் அவனுக்குக் கீழ்ப்படியப் போகிறார்கள்? பூமியிலிருப்பவர்களில் என்னை அவன் நம்பிக்கைகுரியவனாக ஆக்கியுள்ளான்; (நான் வானிலிருப்பவர்களின் நம்பிக்கைக்கும் உரியவன்;) ஆனால், நீங்கள் என்னை நம்ப மறுக்கின்றீர்களே?' என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர் அவனைக் கொன்றுவிட அனுமதி கேட்டார் - அவர் காலித் இப்னு வலீத்(ரலி) என்றே கருதுகிறேன் - ஆனால், நபி(ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள்.
அந்த மனிதன் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், 'இந்த மனிதனின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது; வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள்; சிலை வணங்கிகளைவிட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் 'ஆது' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் நான் அழிப்பேன்' என்றார்கள்.72
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7433அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் 'சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது' எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது' என்றார்கள்.73
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7434ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (அந்த) பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். 'இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் (உங்களுடைய இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)' என்றார்கள்.75
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7435 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் உங்களுடைய இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7436ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பெளர்ணமி இரவில் எங்களிடம் புறப்பட்டு வந்து 'நீங்கள் இந்த முழு நிலாவை நெருக்கடியின்றி காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனை மறுமைநாளில் காண்பீர்கள்' என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7437அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?' என்று மக்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பெளர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?' என்று கேட்டார்கள். மக்கள் 'இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
இவ்வாறுதான் உங்களுடைய இறைவனை நீங்கள் (மறுமை நாளில்) காண்பீர்கள். அல்லாஹ் மறுமைநாளில் மனிதர்களை ஒன்றுகூட்டி, '(உலகத்தில்) யார் எதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்பற்றிச் செல்லட்டும்' என்று கூறுவான். எனவே, சூரியனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்வார்கள். சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்வார்கள். ஷைத்தான்களை வழிபட்டு வந்தவர்கள் ஷைத்தான்களைப் பின்தொடர்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியருப்பார்கள். அவர்களிடையே 'பரிந்துரைப்போர்' அல்லது 'நயவஞ்சகர்கள்' இருப்பார்கள். அப்போது அல்லாஹ் அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத தோற்றத்தில்) வந்து, 'நானே உங்களுடைய இறைவன்' என்று கூறுவான். அதற்கு அவர்கள், 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் நீ எங்கள் இறைவன் அல்லன்). அவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்' என்று கூறுவர்.
அப்போது அல்லாஹ் அவர்களிடம் அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் வந்து, 'நானே உங்களுடைய இறைவன்' என்று சொல்வான். அப்போது அவர்கள், 'நீதான் எங்கள் இறைவன்' என்று கூறியபடி அவனைப் பின்தொடர்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும. அப்போது நானும் என் சமுதாயத்தாருமே அ(ந்தப் பாலத்)தை முதல் முதலாகக் கடப்போம். அன்றைய தினம் இறைத் தூதர்கள் மட்டுமே பேசுவார்கள். அப்போது இறைத்தூதர்களின் பிரார்த்தனை '(இறைவா!) காப்பாற்று! காப்பாற்று!' என்பதாகவே இருக்கும். கருவேல மரத்தின் முற்களைப் போன்ற கொக்கிகள் நரகத்தில் மாட்டப்பட்டிருக்கும். கருவேல மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று பதிலளித்தனர். அந்தக் கொக்கிகள் கருவேல மர முள்ளைப் போன்றுதானிருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெருவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். மக்களில் சிலர் தம் செயலினால் அழிந்து விடுவார்கள். இன்னும் சிலர் (கொக்கியின் பிடி தளர்ந்து நரகத்தில்) விழுந்து விடுவார்கள். மற்றச் சிலர் வேறு நிலையில் இருப்பார்கள்.
பிறகு இறைவன் காட்சியளித்து, தன் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரை தன் கருணையால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். எனவே, அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் வாழ்ந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றிவிடுமாறு வானவர்களுக்கு அவன் கட்டளையிடுவான். வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதி கூறியவர்களில் யாருக்குத் தான் கருணை புரிய வேண்டுமென நாடுகிறானோ அவர்களை (நரகத்திலிருந்து வெளியேற்றிடுமாறு ஆணையிடுவான்). நரகத்திலிருக்கும் அவர்களை (அவர்கள் செய்த) சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளத்தை வைத்து வானவர்கள் இனங் கண்டுகொள்வார்கள். ஆதமின் மகனின் (-மனிதனின்) சஜ்தா அடையாள(ம் உள்ள இட)த்தைத் தவிர அவனை (முழுமையாக) நரகம் தீண்டும். (ஆனால்,) சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். எனவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்டநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்களின் மீது ஜீவ நீர் (-மாஉல் ஹயாத்) ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள்.
பின்னர் அடியார்களிடையே அல்லாஹ் தீர்ப்பளித்து முடிக்கும்போது நரகத்தை முன்னோக்கியபடி ஒருவர் எஞ்சியிருப்பார். அவர்தாம் சொர்க்கத்தில் நுழையக் காத்திருக்கும் கடைசி நரகவாசியாவார். அவர், 'என் இறைவா! நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்புவாயாக! அதன் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது; அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது' என்று கூறுவார். பின்னர் எதைச் சொல்லி அவர் பிரார்த்திக்க வேண்டுமென அல்லாஹ் நாடுவானோ அதைச் சொல்லி அவர் பிரார்த்திப்பார்.
பிறகு அல்லாஹ் (அவரிடம்), 'நீ கேட்பதை நான் கொடுத்தால் இஃதல்லாத வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடும் அல்லவா?' என்பான். அதற்கு அவர், 'இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்க மாட்டேன்' என்று கூறி, இறைவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். அப்போது அல்லாஹ் நரகத்தைவிட்டு அவரின் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். அவர் சொர்க்கத்தை முன்னோக்கி பார்வையைச் செலுத்தும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை அவர் அமைதியாக இருப்பார். பிறகு, 'என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் வரை என்னைக் கொண்டு செல்வாயாக!' என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் அவரிடம், 'உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒருபோதும் என்னிடம் நீ கேட்கமாட்டாய் என உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் நீ வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?' என்று கூறுவான். அதற்கு அவர், 'இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்' எனக் கூறி, அவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் (இறைவனிடம்) வழங்குவார்.
எனவே, அல்லாஹ் அவரை சொர்க்கத்தின் வாசல் வரை கொண்டு செல்வான். சொர்க்க வாசலில் அவர் நிற்கும்போது சொர்க்கவாசல் அவருக்காகத் திறக்கும். அப்போது அவர் அதிலுள்ள உல்லாச சுகங்களைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய வரை அமைதியாக இருப்பார். பிறகு, 'என் இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!' என்று கூறுவார். அப்போது அல்லாஹ், 'உனக்கு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் கேட்கமாட்டேன் என்று கூறி வாக்குறுதிகளையும் உறுதி மொழிகளையும் நீ வழங்கவில்லையா?' என்று கேட்டுவிட்டு, 'மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?' என்று கூறுவான்.
அதற்கு அவர், 'என் இறைவா! உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாய் நான் ஆம்விடக் கூடாது' என்று பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு அல்லாஹ் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு சிரித்ததும், 'சொர்க்கத்தில் நுழைந்து கொள்' என்று அவரிடம் அல்லாஹ் கூறுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின் 'நீ (விரும்பிய) அதை ஆசைப்படலாம்' என்று அவரிடம் இறைவன் சொல்வான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டு தம் இறைவனிடம் கேட்பார். இறுதியில் அல்லாஹ்வே அவருக்கு (ஆசைப்பட வேண்டியவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லி) 'இன்னதை இன்னதை நீ ஆசைப்படு' என்று நினைவுபடுத்துவான். கடைசியில் அந்த மனிதரின் ஆசைகள் எல்லாம் அடங்கும். (அப்போது) அல்லாஹ், '(நீ கேட்ட) இதுவும் உனக்குக் கிடைக்கும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்' என்று சொல்வான்.76
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7438அதாஉ இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அறிவித்தபோது அவர்களுடன் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்னார் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸிற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இறுதியில் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், 'இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான்: என அறிவித்தபோது தான் அபூ ஸயீத்(ரலி) அவர்கள் (குறுக்கிட்டு,) 'இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்' என்றல்லவா ஹதீஸ் இருக்கிறது அபூ ஹுரைராவே!' என்று கேட்டார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து 'உனக்கு இதுவும் இதைப் போன்ற இன்னொரு மடங்கும் கிடைக்கும்' என்று கூறினார்கள் எனவே மனனம் செய்துள்ளேன்' என்றார்கள். அதற்கு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள், 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து 'இதுவும் இதைப் போன்று பத்து மடங்குகளும் உனக்குக் கிடைக்கும்' என்ற சொல்லையே மனனம் செய்துள்ளேன் என உறுதி கூறுகிறேன்' என்றார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் 'அந்த மனிதர் தாம் சொர்க்கத்தில் இறுதியாக நுழையும் மனிதராவார்' என்றார்கள்.77
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7439அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், '(மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'இல்லை' என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்களுடைய இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்' என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள்.
(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்' என்று அழைப்புவிடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டார்கள் தத்தம் கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், 'நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?' என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கே மனைவியோ மக்களோ இருக்கவில்லை' என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், 'இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கவர்கள், 'எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!' என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), 'குடியுங்கள்' என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்து விடுவார்கள். பின்னர் கிறிஸ்தவர்களிடம், 'நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை' என்று கூறப்பட்ட பின் 'நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) 'குடியுங்கள்!' என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் 'மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், '(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர்' 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூறுவார்கள். அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் முறையாக வந்து, 'நானே உங்கள் இறைநம்பிக்கையாளர்கள், 'நீயே எங்கள் இறைவன்' என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, 'அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?' என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், '(இறைவனி) கால் (பாதம்) தான்' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தன்னுடைய காலை வெளிப்படுத்துவான். இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிரம் வணக்கம் செய்ய முடியாது.)78
பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே கொண்டுவைக்கப்படும். (இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன பாலம்?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். 'நஜ்த்' பகுதியில் முளைக்கும் அவை 'கருவேல மர முற்கள்' எனப்படும்' என்றார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்கத் தெளிவாகிவிட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கமாட்டீர்கள். அப்போது அவர்கள், 'எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்; எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)' என்று வேண்டுவார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், 'நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தம் பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரம்னுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். 'எவருடைய உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறைநம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்' என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், 'எவருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூ ஸயீத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை) நீங்கள் நம்பாவிட்டால், 'நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கமாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை இரட்டிப்பாக்குவான்' எனும் (திருக்குர்ஆன் 04:40 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தம் தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் '(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது' என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்து போயிருப்பார்கள். எனவே, சொர்க்க வாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள். அதற்கு 'ஜீவ நீர்' ('மாஉல் ஹயாத்') என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இரண்டு மருங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள். பாறையில் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும்.
ஆக, இவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்போது முத்தைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களின் கழுத்தில் (நரகத்திலிரந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), 'இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச் செய்தான்' என்று கூறுவர். பிறகு (அவர்களிடம்) நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு' என்று (நற்செய்தி) சொல்லப்படும்.79
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7440 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் கவலைப்படும் அளவுக்கு நிறுத்திவைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள், '(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும் படி (யாரையாவது) நாம் கேட்டுக் கொண்டால் என்ன?' என்று பேசிக் கொள்வார்கள். பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, 'நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவீர்; அல்லாஹ் தன்னுடைய கையால் உங்களைப் படைத்தான்; தன்னுடைய சொர்க்கத்தில் உங்களை குடியிருக்கச் செய்தான்; தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; எல்லாப் பொருட்களின் பெயர்களையும் உங்களுக்கு அவன் கற்பித்தான். (எனவே,) இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று கோருவர். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, உண்ணக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டிருந்த மரத்திலிருந்து புசித்துவிட்டதால் தாம் புரிந்த தவற்றினை அவர்கள் எடுத்துக் கூறுவார்கள். '(எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு இறைவனால் நியமிக்கப்பட்ட (முக்கியமான) இறைத்தூதர்களில் முதலாமவரான நூஹ்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.
உடனே இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும் '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று கூறி, அறியாமல் தம் இறைவனிடம் வேண்டியதால் ஏற்பட்ட தம் தவற்றினை அவர்கள் நினைவுகூர்வார்கள். பிறகு, 'நீங்கள் பேரருளாள(ன் இறைவ)னின் உற்ற நண்பர் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று சொல்லிவிட்டு, தாம் (உலக வாழ்வில்) சொன்ன மூன்று பொய்களை எடுத்துக்கூறுவார்கள். பிறகு, 'நீங்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவருக்கு அல்லாஹ் தவ்ராத் (வேதத்)தை வழங்கி, அவருடன் உரையாடி, தன்னுடன் கலந்துரையாடும் அளவுக்கு நெருக்கம் அளித்த அடியாராவார் அவர்' என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று சொல்லிவிட்டு, (உலகில்) ஒருவரைக் கொலை செய்துவிட்டதால் தாம் செய்த குற்றத்தை எடுத்துக்கூறுவார்கள். பிறகு 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான, அவனுடைய ஆவியும் வார்த்தையுமான ஈசா(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று மூஸா கூறுவார்கள். உடனே இறைநம்பிக்கையாளர்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர்களும் '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை; இறைவனால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.
உடனே இறைநம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனை அவனுடைய இல்ல(மான சொர்க்க)த்தில் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் என் இறைவனைக் காணும்போது சஜ்தாவில் விழுந்துவிடுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே)விட்டுவிடுவான். பிறகு எவன், 'எழுங்கள், முஹம்மதே! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும்' என்று கூறுவான். அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி என் இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் நான் (அவனுடைய இல்லத்திலிருந்து) வெளியேறி அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். -கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'பின்னர் நான் (அவனுடைய இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று (நரகத்திலிருந்து) அவர்களை வெளியேற்றி, சொர்க்கத்திற்குள் அனுப்பிவைப்பேன்' என்றும் அனஸ்(ரலி) அவர்கள் கூற கேட்டேன்.
-பிறகு மீண்டும் (இரண்டாம் முறையாக) என் இறைவனை அவனுடைய இல்லத்தில் சந்திக்க நான் அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் இறைவனைக் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே)விட்டுவிடுவான். பின்னர் 'முஹம்மதே! எழ
'நான் வெளியேறிச் சென்று, அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன் என்றும் அனஸ்(ரலி) அவர்கள் கூறியதை கேட்டேன்' என கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் மூன்றாம் முறையாக மறுபடியும் என் இறைவனை அவனுடைய இல்லத்தில் சந்திக்க நான் அனுமதி கேட்பேன். எனக்கு அந்த அனுமதி வழங்கப்படும். இறைவனை நான் காணும்போது சிரவணக்கத்தில் விழுவேன். தான் நாடிய வரை (அப்படியே) என்னை அல்லாஹ்விட்டுவிடுவான். பிறகு 'முஹம்மதே! எழுங்கள். செய்க் ஏற்கப்படும். கோருக் அது தரப்படும்' என இறைவன் கூறுவான். அப்போது நான் எழுந்து, என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றி புகழ்வேன். பின்னர் பரிந்துரைப்பேன். அவன் எனக்கு வரம்பு விதிப்பான். நான் வெளியேறிச் சென்று, அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். 'நான் வெளியேறிச் சென்று அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன் என்று கூறியதை கேட்டேன்' என கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
'இறுதியில் குர்ஆன் தடுத்துவிட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாம்விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் இருக்கமாட்டார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, '(நபியே!) உம் இறைவன் உம்மை ('மகாமும் முஹ்மூத்' எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்' எனும் (திருக்குர்ஆன் 17:79 வது வசனத்தை) ஓதினார்கள்.
பிறகு இந்த 'மகாமும் மஹமூத்' எனும் இடம் உங்கள் நபிக்காக வாக்களிக்கப்பட்ட இடமாகும்' என்று கூறினார்கள்.80
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7441அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை ஒரு கூடாரத்தினுள் ஒன்றுதிரட்டினார்கள். அவர்களிடம் 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் (அந்நாளில்) 'கவ்ஸர்' தடாகத்தின் அருகே இருப்பேன்' என்றார்கள்.81
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7442இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுகை தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும் நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகியாவாய். உனக்கே புகழ் அனைத்தும் நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும் நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் ஒளியும் ஆவாய். நீயே உண்மை. உன் சொல் உண்மை. உன் வாக்கு உண்மை. உன் சந்திப்பு உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டு வந்தேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்களையும், என்னைவிட எதை நீ நன்கு அறிந்துள்ளாயோ அதையும் மன்னித்தருள்வாயாக. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை.82
(மேற்கண்ட ஹதீஸில் 'நிர்வாம்' என்பதைக் குறிக்க 'கய்யிம்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) வேறு சில அறிவிப்புகளில் 'கய்யாகி' மற்றும் 'கய்யூம்' ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 'அனைத்தையும் கண்காணிப்பவன்' என்று பொருள்.
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (திருக்குர்ஆன் 02:255 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அல்கய்யாகி' என ஓதியுள்ளார்கள். இரண்டுமே புகழைக் குறிக்கும் (மிகைச்) சொற்கள் தாம்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7443 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்கமாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளரும் இருக்கமாட்டார்; தடுக்கிற திரையும் இருக்காது.
என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.83
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7444 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரண்டு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை; (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருடகளும் பொன்னால் ஆனவையாகும். 'அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மேலுள்ள 'பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.
என அபூ மூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.84
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7445 'பொய்ச் சத்தியத்தின் மூலம் ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித்துக் கொள்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையிலேயே அவனை அவர் சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு இதை உண்மைப்படுத்துகிற இறைவசனத்தை ஓதினார்கள்: அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறும் கிடையாது; அவர்களிடம் அல்லாஹ் பேச மாட்டான் (திருக்குர்ஆன் 03:77)85' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7446 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்.
ஒருவர் (தம்) விற்பனைப் பொருளுக்கு (அதைக் கொள்முதல் செய்தபோது உண்மையில்) தாம் கொடுத்த விலையை விட அதிக விலை கொடுத்ததாகப் பொய்ச் சத்தியம் செய்கிறார். மற்றொருவர், ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் ஒன்று கூடும் நேரத்தில்) பொய்ச் சத்தியம் செய்கிறார். வேறொருவர், தம் தேவைக்குப் போக மிஞ்சிய தண்ணீரை (வழிப்போக்கருக்குத் தராமல்) தடுக்கிறார். (அவரிடம்) அல்லாஹ் மறுமைநாளில் 'நீ தேடிச் சம்பாதிக்காத பெருளை (-நீரை) நீ தர மறுத்ததைப் போன்று இன்று என் அருளை உனக்கு வழங்க மறுக்கிறேன்' என்று கூறுவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.86
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக