பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

குழப்பங்கள் (சோதனைகள்) 7102-7130


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7102-7103-7104அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(ஜமல் போரின்போது பஸ்ராவுக்குச் செல்லுமாறு) மக்களைத் தூண்டும்படி கூஃபாவாசிகளிடம் அம்மார்(ருலி) அவர்களை அலீ(ரலி) அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அப்போது அம்மாரைச் சந்திக்க அபூ மூஸா(ரலி) அவர்களும் அபூ மஸ்ஊத்(ரலி) அவர்களும் வந்தார்கள். அவர்களிருவரும் (அம்மாரிடம்) '(ஆயிஷாவை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தீவிரத்தைத் தான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நீங்கள் செய்தவற்றிலேயே எங்களுக்கு அறவே பிடிக்காத செயலாக நாங்கள் கருதுகிறோம்' என்றார்கள். அப்போது அம்மார்(ரலி) அவர்கள், '(அலீ(ரலி) அவர்களுடன் சேர்ந்து ஆயிஷா(ரலி) அவர்களுடன் சேர்ந்து ஆயிஷா(ரலி) அவர்களை எதிர்க்காமல்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தாமதத்தைத்தான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நீங்கள் இருவரும் செய்தவற்றிலேயே எனக்கு அறவே பிடிக்காத செயலாக கருதுகிறேன்' என்றார்கள். பின்னர் அபூ மஸ்ஊத்(ரலி) அவர்கள் மற்ற இருவருக்கும் ஆளுக்கொரு அங்கியை மற்ற இருவருக்கும் ஆளுக்கொடு அங்கியை அணிவித்தார்கள். பிறகு அவர்கள் அனைவரும் பள்ளிவாசலுக்குச் சென்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7105-7106-7107அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் அபூ மஸ்ஊத்(ரலி), அபூ மூஸா(ரலி) அம்மார்(ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மஸ்ஊத்(ரலி) அவர்கள் (அம்மார்(ரலி) அவர்களிடம்) 'இப்போரில் உங்கள் (அணியிலுள்ள) தோழர்களில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் நான் நினைத்தால் குறை கூற முடியும்; உங்களைத் தவிர நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டதிலிருந்து (ஆயிஷா(ரலி) அவர்களை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தீவிரத்தைப் போன்று வேறு எந்தப் பெருங் குறையையும் உங்களிடம் நான் காணவில்லை' என்றார்கள். அதற்கு அம்மார்(ரலி) அவர்கள், 'அபூ மஸ்ஊத் அவர்களே! நீங்களும் உங்களுடைய இந்தத் தோழரும் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டதிலிருந்து (ஆயிஷா(ரலி) அவர்களை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்களிருவரும் காட்டும் தாமதத்தைப் போன்று வேறு எந்தப் பெருங் குறையையும் உங்களிடம் நான் காணவில்லை' என்றார்கள்.
வசதியானவராய் இருந்த அபூ மஸ்ஊத்(ரலி) அவர்கள் அப்போது 'பணியாளரே! இரண்டு அங்கிகளைக் கொண்டுவா! என்று உத்தரவிட்டு, (அவை கொண்டுவரப்பட்டவுடன் அவ்விரண்டில் ஒன்றை அபூ மூஸா(ரலி) அவர்களுக்கும் மற்றொன்றை அம்மார்(ரலி) அவர்களுக்கும் கொடுத்தார்கள். பிறகு, 'இதை அணிந்து கொண்டு இருவரும் ஜுமூஆ தொழுகைக்குச் செல்லுங்கள்' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7108 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7109 சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(அபூ ஜஅஃபர்) மன்சூர் ஆட்சிக் காலத்தில் இராக்கிலுள்ள) கூஃபாவில் அபூ மூஸா(ரஹ்) அவர்களை சந்தித்தேன். அன்னார் (கூஃபாவின் நீதிபதியான) அப்துல்லாஹ் இப்னு ஷுப்ருமா(ரஹ்) அவர்களிடம் வந்திருக்கிறார்கள். அபூ மூஸா(ரஹ்) அவர்கள் 'என்னை (கூஃபாவின் ஆளுநர்) ஈசா இப்னு மூஸாவிடம் அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு நான் உபதேசம் செய்ய வேண்டும்' என்று இப்னு ஷுப்ருமா விஷயத்தில் (ஏதும் செய்துவிடுவார் என்று) இப்னு ஷுப்ருமா பயந்துவிட்டார் போலும் அதனால் (அபூ மூஸாவின் கோரிக்கையை ஏற்று) அவர் செயல்படவில்லை. பின்னர் ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாக அபூ மூஸா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள் பெரும் படையணிகளுடன் முஆவியா(ரலி) அவர்களை நோக்கிப் பயணமானார்கள். (இதை அறிந்த முஆவியா(ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அவர்கள் முஆவியா(ரலி) அவர்களிடம், 'தன் எதிரணியைப் புறமுதும்ட்டு ஓடச் செய்யாத வரையில் பின்வாங்காத பெரும் படையணியை நான் பார்க்கிறேன்' என்று குறிப்பிட்டார்கள். முஆவியா(ரலி) அவர்கள், '(அவர்கள் கொல்லப்பட்டால்) முஸ்லிம்களின் (வருங்கலாச்) சந்ததிகளுக்கு (பொறுப்பேற்க) யார் இருக்கிறார்கள்?' என்று கேட்க, அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அவர்கள், 'நான் (இருக்கிறேன்)' என்று பதிலளித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களும்ம அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அவர்களும், 'நாங்கள் ஹஸன்(ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் சமாதானம் செய்துகொள்ளும் படி கூறுகிறோம்' என்றார்கள்.
தொடர்ந்து ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடை மீது நின்று) உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஹஸன்(ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானம் செய்துவைப்பான்' என்று கூறினார்கள் என அபூ பக்ரா(ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7110 உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஹர்மலா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
உசாமா(ரலி) அவர்கள் என்னை அலீ(ரலி) அவர்களிடம் அனுப்பி, 'இப்போது அவர் (அலீ(ரலி) உன்னிடம் உம் தோழர் (உசாமா, ஜமல் மற்றும் ஸிஃப்பீன் போர்களில் எனக்கு ஆதரவளிக்காமல்) பின்தங்கியதற்குக் காரணம் என்ன? என்று கேட்பார். நீங்கள் சிங்கத்தின் தாடைக்குள் இருந்தாலும் உங்களுடன் இருப்பதையே நான் விரும்புவேன்; ஆனால், (முஸ்லிம்களிடையே நடக்கும்) இந்தச் சண்டையில் எனக்கு உடன்பாடில்லை என்று நான் சொன்னார்கள். (நானும் அவ்வாறே அலீ(ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) எனக்கு எதுவும் கொடுக்கவில்லை. எனவே, நான் ஹஸன்(ரலி), ஹுசைன்(ரலி) மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) ஆகியோருடம் சென்றேன். அவர்கள் என்னுடைய வாகனத்தில் அது (தாங்க முடிந்த அளவிற்கு) எனக்காக (அன்பளிப்புப் பொருள்களை) ஏற்றியனுப்பினார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7111 நாபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
மதீனாவாசிகள் யஸீத் இப்னு முஆவியாவுக்க அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக் கொண்டபோது, இப்னு உமர்(ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்று திரட்டி, 'மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவருக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டு காட்டுவதற்காக வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமைநாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவரின் தூதர் வழிமுறைப்படி நாம் மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப்பிரமாணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போரிடுவதை விடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்து கொடுத்த விசுவாசப் பிராமணத்தை விலக்கிக் கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக் கூடியதாக இருக்கும்' என்றார்கள்.41


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7112அபுல் மின்ஹால் இப்னு சலாமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இப்னு ஸியாத் (பஸ்ராவிலிருந்து வெளியேறி ஷாம் நாட்டுக்கு வர, அங்கு) மர்வான் இப்னி ஹகம் ஷாம் நாட்டில் (ம்ளர்ச்சியை ஆரம்பித்து) இருந்தபோது, மேலும் (அதே நேரத்தில்) மக்காவில் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் பஸ்ராவில் காரிஜிய்யாக்களும் கிளர்ச்சியில் அபூ பர்ஸா அல்அஸ்லமீ(ரலி) அவர்களிடம் சென்றேன். அன்னார் பேரீச்சங் கழியாலான உப்பரிகை ஒன்றில் அமர்ந்திருக்க அவர்களின் இல்லத்தினுள் நுழைந்து அவர்களிடம் நாங்கள் அமர்ந்துகொண்டோம். 42 அப்போது என் தந்தை (ஸலமா) அபூ பர்ஸா(ரலி) அவர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் எண்ணத்தில் பேசத் தொடங்கினார்கள். 'அபூ பர்ஸா! மக்கள் எந்த விஷயத்தில் சிக்கிக் கொண்டுவிட்டார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று என் தந்தை கேட்டார்கள். அப்போது அபூ பர்ஸா(ரலி) அவர்கள் பேசி நான் கேட்ட முதல் விஷயம் அவர்கள் பேசி நான் கேட்ட முதல் விஷயம் இதுதான். (அன்னார் கூறினார்கள்:) குறைஷிக் குடும்பங்கள் சிலவற்றின் மீது நான் கோபம் கொண்டவனாய் மாறியதற்கு அல்லாஹ்விடம் நற்பலனை எதிர்பார்க்கிறேன். (குறைஷியரிடம் கூறினேன்:) அரபுகளே! நீங்கள் இழிவு, பொருளாதாரக் குறைவு மற்றும் வழிகேடு ஆகிய (மோசமான) நிலைகளில் இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அல்லாஹ், இஸ்லாத்தின் மூலமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலமாகவும் உங்களைக் காப்பாற்றினான். அதன் விளைவாக நீங்கள் காண்கிற இந்த (கண்ணியம், வளமிக்க வாழ்வு, நேர்வழி ஆகிய நல்ல) நிலைகளை அடைந்தீர்கள். இந்த உலக(மோக)ம் எத்தகையதென்றால், உங்களுக்கிடையே அது சீர்கேட்டை(யும் குழப்பத்தையும்) விளைவித்துவிட்டது. ஷாம் நாட்டிலிருக்கிறவர் (மர்வான் இப்னி ஹகம்), அல்லாஹ்வின் மீதாணையாக! உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகிறார். இங்கு பஸ்ராவில்) உங்கள் முன்னே இருக்கிறார்களே அவர்களும் (காரிஜிய்யாக்கள்), அல்லாஹ்வின் மீதாணையாக! உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகிறார்கள். மக்காவில் இருக்கிறாரே அவரும் (அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்) உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகிறார்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7113ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
இன்றிருக்கும் நயவஞ்சகர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நயவஞ்சகர்களை விட மோசமானவர்கள் ஆவர். (ஏனெனில்) அன்று அவர்கள் இரகசியமாகச் செயல்பட்டு வந்தார்கள். இன்றோ இவர்கள் பம்ரங்கமாகச் செயல்படுகிறார்கள்.43


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7114ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப் பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது. 44


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7115 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.45
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7116 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் 'துல்கலஸா' கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7117 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'கஹ்தான்' குலத்திலிருந்து ஒருவர் தோன்றி, தம் கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லாத வரை மறுமை நாள் வராது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7118 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது. 49
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7119 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிக 'தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது' என்று இடம் பெற்றுள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7120 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இப்போதே) தானதர்மம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவர் தம் தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறுபவரைத் தேடி) நடந்து செல்வார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காணமாட்டார்.
என ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்.50


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7121 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் மாதமும் ஒன்றாகவே இருக்கும்.51 மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.52 மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாம், காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாத வரை மறுமைநாள் வராது. 53 மேலும், உங்களிடையே செல்வம் பெரும்க் கொழிக்காத வரை மறுமைநாள் வராது. அப்போது செல்வன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கமுனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார்.54 மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, 'அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) கூறாத வரை மறுமை நாள் வராது. 55 சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமைநாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக்காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும். 56
இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவுமாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவுமாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர்த மது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதைச் சாப்பிட்டிருக்கமாட்டார்; அதற்குள் மறுமைநாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7122முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், 'அவனால் உமக்கென்ன தீங்கு?' என்று கேட்டார்கள். நான், '(அச்சம் தான்.) ஏனெனில், தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'இது என்ன (பிரமாதம்)? (அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்ட விருக்கிறானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7123நாஃபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) அவர்கள், '(தஜ்ஜால்) (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்று வலக் கண் குருடானவனாக இருப்பான்' என்றார்கள்.
இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டுச் சொன்னதாகவே கருதுகிறேன்.58


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7124 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா மும்முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.59


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7125 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மஸுஹுத் தஜ்ஜாலைக் குறித்த அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கம். ஒவ்வொரு நுழைவாயிலின் மீதும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள்.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.60


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7126 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மதீனாவிற்குள் மஸீஹுத் தஜ்ஜால் குறித்த அச்சம் புகாது. அந்நாளில் மதீனாவிற்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள்.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவரான இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இராக்கிலுள்ள) பஸ்ரா சென்றேன். (அங்கு) அபூ பக்ரா(ரலி) அவர்கள் இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7127அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிய பின் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது 'நான் உங்களை அவனைப் பற்றி அச்சுறுத்தி எச்சரிக்கிறேன். இறைத்தூதர் எவரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. ஆயினும், எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாருக்குத் தெரிவிக்காத ஒரு தகவலை நான் உங்களுக்குச் சொல்வேன்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்' என்றார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7128 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(ஒரு நாள்) நான் உறங்கிக் கொண்டிருந்தபோது நான் கஅபாவைச் சுற்றிவந்து கொண்டிருப்பதாக (கனவில்) கண்டேன். அப்போது மாநிறமான படிந்த தலை முடியுடைய மனிதர் ஒருவரின் தலையிலிருந்து 'தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்க' அல்லது 'சிந்திக் கொண்டிருக்க'க் கண்டேன். 'இவர் யார்?' என்று கேட்டேன். 'மர்யமின் மகன் (ஈசா)' என்றார்கள். பிறகு நான் திரும்பிப் பார்த்தபடியே சென்றபோது (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று ஒரு கண் குருடான, சுருட்டைத் தலைமுடியுடைய, சிவப்பான, பருமனான மனிதன் ஒருவன் அங்கிருந்தான். 'இவன்தான் தஜ்ஜால், 'மக்களில் இவனுக்கு உருவ அமைப்பில் ஒப்பானவன் 'இப்னு கத்தன்' எனும் குஸாஆ குலத்து மனிதன் ஆவான்' என்றார்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.61


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7129ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவதை கேட்டிருக்கிறேன்.62


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7130ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
தஜ்ஜாலைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, 'அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். அவனுடன் உள்ள நெருப்பு (உண்மையில்) குளிர்ந்த நீராகவும், அவனுடன் உள்ள நீர் (உண்மையில்) நெருப்பாகவும் இருக்கும்' என்றார்கள்.63
அபூ மஸ்வூத்(ரலி) அவர்களும், 'நான் இந்த ஹதீஸை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருக்கிறேன்' என்று கூறினார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக