பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

ஓரிறைக் கோட்பாடு 7397-7421

ஓரிறைக் கோட்பாடு

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7397
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் 'நான் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை (வேட்டைக்காக) அனுப்புகிறேன். (அது வேட்டிடையாடிக் கொண்டு வருகிறவற்றை நான் உண்ணலாமா?)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் பயிற்சியளிக்கப்பட்ட உங்களின் நாயை (வேட்டைக்காக) அனுப்பிவைக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறியிருந்தால் அது (உங்களுக்காக வேட்டையாடிக்) கவ்விப்பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள். நீங்கள் இறகு இல்லாத அம்பை எய்து, அது (தன்னுடைய முனையால்) தைத்துக் கொன்றதையும் சாப்பிடுங்கள்' என்று கூறினார்கள்.32


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7398ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! இங்கு இப்போதுதான் இணைவைப்பிலிருந்து விலம் (இஸ்லாத்தை ஏற்று) வந்த சில சமுதாயத்தார் உள்ளனர். அவர்கள் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். அவர்கள் பிராணிகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறுகிறார்களா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் அதைச் சாப்பிடலாமா)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (அதன் மீது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உண்ணுங்கள்' என்று பதில் சொன்னார்கள்.
இதே ஹதீஸை மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 33


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7399அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு செம்மறி ஆட்டுக்கிடாக்களை அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') சொல்லியும், அல்லாஹு மிகப்பெரியவன் என்று (தக்பீர்) சொல்லியும் குர்பானி கொடுத்தார்கள்.34


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7400ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் இருந்தேன். அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், 'தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதற்குப் பகரமாக மற்றொரு பிராணியை அறுக்கட்டும். (தொழுது முடிக்கும்வரை) அறுக்காமலிருப்பர் (தொழுகைக்குப் பின்) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்' என்றார்கள்.35


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7401 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் உங்கள் தந்தையர் பெயர் சொல்லி சத்தியம் செய்ய வேண்டாம்; சத்தியம் செய்ய வேண்டாம். சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் பெயர் கூறியே சத்தியம் செய்யட்டும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.36


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7402அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப்பே(ர் கொண்ட உளவுப்படையின)ரை (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் அன்சாரியான குபைப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். (உளவுப்படையினரின் வருகையை அறிந்து ஹுதைல் எனும் கூட்டத்தார் பின்தொடர்ந்து வந்து சிலரைக் கொன்றுவிட்டு, சிலரை சிறைபிடித்தார்கள். குபைப் மக்காவில் பனுல் ஹாரிஸ் எனும் கூட்டத்தாரிடம் விற்கப்பட்டார்.) அவர்கள் குபைப்(ரலி) அவர்களைக் கொலை செய்வதற்காக ஒன்று திரண்டபோது குபைப்(ரலி) அவர்கள் தங்களின் மறைவிடத்து முடிகளை மழித்துக் கொள்வதற்காக ஹாரிஸின் மகளிடம் சவரக்கத்தி ஒன்றை இரவல் வாங்கினார்கள். அவர்கள் அவரைக் கொல்வதற்காக (மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே சென்றபோது குபைப்(ரலி) அவர்கள், 'நான் முஸ்லிமாகக் கொல்லப்படும் இந்த வேளையில் எதைப் பற்றியும் நான் பொருட்படுத்துவதாக இல்லை. நான் எந்தப் பகுதியில் கொல்லப்பட்டாலும் அது அல்லாஹ்வுக்காகத்தான் (என்பதை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன்). நான் கொல்லப்படுவது எல்லாம் அல்லாஹ்வின் உள்ளமைக்காகத்தான். அவன் நினைத்தால் துண்டிக்கப்பட்ட என் உறுப்புகளின் இணைப்புகளின் மீது அருள்வளத்தைப் பொழிவான்' என்று பாடினார்கள். பின்னர், ஹாரிஸின் மகன், குபைப்(ரலி) அவர்களைக் கொன்றுவிட்டான். குபைப்(ரலி) அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களின் செய்தியை அவர்கள் கொல்லப்பட்ட அன்றே நபி(ஸல்) அவர்கள் (இறை அறிவிப்பின் வாயிலாக அறிந்து) தம் தோழர்களுக்குத் தெரிவித்தார்கள்.39


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7403 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வை விட அதிக ரோஷம் உள்ளவர் வேறெவரும் இல்லை. எனவே நான் அவன் ஆபாசங்களுக்குத் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் விரும்புகிறவர் வேறெவருமில்லர்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7404 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், 'என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது' என்று (கருணையைத்) தனக்கு.த்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான்.
இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7405 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:
என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7406 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
'(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ, உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதோனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை வேறு சிலர் அனுபவிக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்' எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது, 'உங்களுக்கு மேலிருந்து' என்பதைக் கேட்டவுடன் '(இறைவா!) உன் (திரு) முகத்தால் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லது உங்கள் கால்களுக்குக் கீழிலிருந்து' என்பதைக் கேட்டவுடனும் '(இறைவா!) உன் இரு) முகத்தால் பாதுகாப்புக் கோருகிறேன்' என்றார்கள். 'உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து...' என்பதைக் கேட்டவுடன் 'இது (முந்தைய வேதனைகளை கூட) மிக எளிதானது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7407 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது அவர்கள், 'அல்லாஹ்வை நீங்கள் அறியாதவர்கள் அல்லர். நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்' என்று கூறிவிட்டு, தம் கரத்தால் தம் கண்ணைச் சுட்டிக் காட்டினார்கள். மேலும், 'மஸீஹுத் தஜ்ஜால் கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்' என்றும் கூறினார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7408 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவனால் அனுப்பிவைக்கப் பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. (நினைவிற் கொள்க!) அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால் உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனின் இரண்டு கண்களுக்கிடையே 'காஃ'பிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7409 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்க கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே, புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்' என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7410 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(ஆதி முதல் அந்தம் வரை வாழ்ந்த) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் அப்படியே மறுமை நாளில் அல்லாஹ் ஒன்று திரட்டுவான். அப்போது அவர்கள் '(நமக்கு ஏற்பட்டுள்ள) இந்த(ச் சோதனையான)க் கட்டத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் (யார் மூலமாவது) நம் இறைவனிடம் மன்றாடினால் (மிகவும் நன்றாயிருக்கும்)' என்று பேசிக் கொள்வார்கள். பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களே! மக்களை(ச் சூழ்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையை) நீங்கள் காணவில்லையா? அல்லாஹ் தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். (எனவே) இந்த(ச் சோதனையான)க் கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவற்றை மக்களிடம் கூறுவார்கள். '(எனவே, நீங்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்' என்று கூறுவார்கள்.
உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவற்றை அவர்களிடம் கூறுவார்கள். பிறகு, 'நீங்கள் அளவற்ற அருளாள(ன் இறைவ)னின் உற்ற நண்பர் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே இறைநம்பிக்கையாளர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவறுகளை மக்களிடம்ம செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' எனவே, நீங்கள் அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.
உடனே இறைநம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என்னுடைய இறைவனிடத்தில் (பரித்துரை செய்ய) அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அதற்கான அனுமதி எனக்கு வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது அவனுக்கு (சிரம்பணிந்து) சஜ்தாவில் விழுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் (அப்படியே) என்னை (சிரவணக்கத்தில்)விட்டுவிடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து, 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; செவியேற்கப்படும் கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும் பரிந்ரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று என்னிடம் சொல்லப்படும். அப்போது நான் என் இறைவனை அவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ் மொழிகளைக் கூறி போற்றுவேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், '(நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு நான் அவர்களை சொர்க்கத்தில் அனுப்பிவைப்பேன். பின்னர் மீண்டும் நான் (இறைவனிடம்) செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் (முன்போன்றே, சிரம் பணிந்து) சஜ்தாவில் விழுவேன். அப்போது அல்லாஹ் தாம் நாடிய வரை என்னை (அப்படியே சிர வணக்கத்தில்)விட்டுவிடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து) 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள். உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும். அப்போது நான் என் இறைவனை அவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ் மொழிகளை கூறி போற்றிவேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பi வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு (அவர்களுக்காகப் பரிந்துபேசி) அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு (அவர்களுக்காகப் பரிந்துபேசி) அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன்.. பிறகு (மூன்றாம்) முறையாக நான் (இறைவனிடம்) செல்வேன். (நான்காம் முறையாக இறைவனிடம்) செல்வேன். அப்போது நான், 'என் இறைவா! குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாம்விட்ட(வர்களான இறை மறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று சொல்வேன்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை) என்று கூறியதுடன் அவரின் உள்ளத்தில் ஓர் வாற்கோதுமை எடையளவு நன்மையிருக்குமோ அவர் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு யார் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியதுடன் அவரின் உள்ளத்தில் மணிக் கோதுமையின் உடையளவு நன்மை இருக்குமோ அவரும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு யார் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியதுடன், அவரின் உள்ளத்தில் கடுகின் எடையளவு நன்மை இருக்குமோ அவரும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7411 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. இரவும் பகலும் (மழை மேகத்தைப் போல் அது தன் அருள மழையைப் பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனுடைய கரத்திலுள்ள (செல்வத்)தை வற்றச் செய்து விடவில்லை என்பதைப் பார்த்தீர்களா? வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு (முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்), நீரின் மீது இருந்தது. அவனுடைய இன்னொரு கரத்தில் தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; அவனே உயர்த்துகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7412 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு 'நானே அரசன்!' என்று சொல்வான்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.50


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7413 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன் கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் இப்னு உமர்(ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7414அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒருவிரலின் மீதும் பூமிகளை ஒருவிரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, 'நானே அரசன்' என்று கூறுவான்' என்றார்.
(இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்துவிட்டு, 'அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை' எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இந்த யூதரின் சொல்லைக் கேட்டு வியப்படைந்து, அதை உறுதிப்படுத்தும் வகையில் சிரித்தார்கள்.'51


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7415அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்:
வேதக்காரர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'அபுல் காசிமே! (மறுமையில்) அல்லாஹ் வானங்களை ஒரு விரலின் மீதும் பூமிகளை ஒரு விரலின் மீதும் மரத்தையும் ஈர மண்ணையும் ஒரு விரலின் மீதும், (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு, 'நானே அரசன்; நானே அரசன்' எனக் கூறுவான்' என்றார்.
(இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, 'அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்கவேண்டுமோ அப்படி மதிக்கவில்லை' எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.52


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7416முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், 'என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்' என்று சொல்ல, இச்செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் தன் ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால்தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் (ஆபாசங்கள்) அனைத்தையும் தடைசெய்துவிட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து)விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகிறவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. எனவேதான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புகிறவர் வேறெவருமில்லை. எனவேதான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்.53


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7417ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், 'குர்ஆனிலிருந்து உங்களுடன் (மனனமாக) ஏதேனும் ஒன்று (ஷைஉ) இருக்கின்றதா?' என்று கேட்டார்கள். அம்மனிதர் 'ஆம். இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம்' என்று சில அத்தியாயக்ளைப் பெயர் குறிப்பிட்டுச் சொன்னார்.55


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7418இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது பன}தமீம் குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பன}தமீம் குலத்தாரே!' என்றார்கள். அதற்கு அவர்கள், 'எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்' என்று கூறினார்கள்: அப்போது யமன் நாட்டு மக்கள் சிலர் (-அஷ்அரீ குலத்தார்) வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'யமன் வாசிகளே! நீங்கள் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பன}தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை' என்றார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் (அதை) ஏற்றுக் கொண்டோம்; மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், இந்த உலகம் உண்டானதன் ஆரம்ப நிலை குறித்துத் தங்களிடம் கேட்பதற்காகவுமே நாங்கள் தங்களிடம் வந்தோம்' என்று கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தன் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்' என்றார்கள்.
(அறிவிப்பாளர் கூறுகிறார்:) பின்னர் ஒருவர் என்னிடம் வந்து, 'இம்ரானே! உங்கள் ஒட்டகத்தை (கண்டு) பிடியுங்கள்; அது (ஓடிப்) போய்விட்டது' என்று கூற, நான் அதைத் தேட (எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதபடி கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது போனால் போகட்டும் என்று கருதி, (ஹதீஸ் முடிவதற்கு முன்) நான் அங்கிருந்து எழுந்து செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.57


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7419 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது. வாரிவழங்குவதால் அது வற்றிவிடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த (நேரத்)திலிருந்து (இப்போது வரை) அவன் வாரி வழங்கியது எவ்வளவு இருக்கும் சொல்லுங்கள். அதுவும் கூட அவனுடைய வலக்கரத்தில் இருப்பதைக் குறைத்துவிடவில்லை. (வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபோது) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீதிருந்தது. அவனுடைய மற்றொரு கரத்தில் 'கொடைப் பொழிவு' அல்லது 'கொடைக்குறைவு' உள்ளது. (அதன் வாயிலாக) அவன் (சிலரை) உயர்த்துகிறான்; (சிலரைத்) தாழ்த்துகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.58


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7420அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்' என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
'(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டீர்கள்' எனும் (திருக்குர்ஆன் 33:37 வது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப்(ரலி) அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி(ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது) தான் அருளப்பெற்றது' என்று அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.59


பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7421அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் விஷயத்தில் நான் அருளப்பெற்றது. அன்று நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக ('வலீமா' விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள். ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாகப் பெருமை பாராட்டிவந்தார்கள்: 'அல்லாஹ் எனக்கு வானத்தில் மணமுடித்து வைத்தான்' என்று சொல்வார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக