பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

குழப்பங்கள் (சோதனைகள்) 7131-7136


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7131 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக, உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே 'காஃபிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இதே கருத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7132அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜாலைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். அவனைப் பற்றி எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவித்த இவற்றில் இவையும் அடங்கும்:
மதீனாவின் தெருக்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனாவையடுத்து (ஷாம் நாட்டுத் திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான். அந்த நாளில் 'மக்களிலேயே சிறந்தவரான ஒருவர்' அல்லது 'மக்களிலேயே சிறந்தவர்களில் ஒருவர்' அவனிடம் புறப்பட்டுச் சென்று, 'எவனுடைய செய்தியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதிகூறுகிறேன்' என்று கூறுவார். அப்போது தஜ்ஜால், 'நான் இவரைக் கொன்று பிறகு உயிராக்கிவிட்டால் அப்போதுமா (நான் இறைவன் தான் எனும்) விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்கள்?' என்று (தம்முடன் உள்ளவர்களிடம்) கேட்பான். மக்கள் 'இல்லை' என்று பதிலளிப்பார்கள். உடனே அவன் அம்மனிதரைக் கொன்று பிறகு உயிராக்கிவிடுவான். உடனே, அந்த மனிதர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று உன்னை அறிந்துகொண்டதை விட நன்றாக வேறு எப்போதும் அறிந்து கொண்டதில்லை' என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அந்த மனிதரைக் கொன்றுவிட விரும்புவான். ஆனால், அவரின் மீது அவனுக்கு ஆதிக்கம் வழங்கப்படாது. 64


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7133 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மதீனாவின் தெருக்களில் வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். அதில் கொள்ளை நோய் நுழையாது; தஜ்ஜாலும் நுழைய மாட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7134 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மதீனா நகருக்கு தஜ்ஜால் வருவான். அதை வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்பான். எனவே, அதை தஜ்ஜால் நெருங்கமாட்டான்; அல்லாஹ் நாடினால் கொள்ளைநோயும் அணுகாது.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7135ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்.
ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடுக்கத்துடன் என்னிடம் வந்து, 'வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்கு இன்று திறக்கப்பட்டுள்ளது' என்று சொல்லி, தம் கட்டை விரலையும் அதற்கடுத்த விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே நல்லவர்கள் இருக்க, நாங்கள் அழிந்துபோவோமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; தீமை பெரும்விடும்போது' என்றார்கள்.67


பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7136 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
யஃஜூஜ் மற்றும் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவர் இந்த அளவிற்குத் திறக்கப்படுகின்றது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரனா வுஹைப் இப்னு காலித்(ரஹ்) அவர்கள் (அரபு எண்) தொண்ணூறு என்பதைப் போன்று (விரல்களை) மடித்துக் காட்டினார்கள்.68


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக